/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ குடிநீர் தொட்டி, மோட்டார் பழுது தண்ணீர் பற்றாக்குறையால் அவதி குடிநீர் தொட்டி, மோட்டார் பழுது தண்ணீர் பற்றாக்குறையால் அவதி
குடிநீர் தொட்டி, மோட்டார் பழுது தண்ணீர் பற்றாக்குறையால் அவதி
குடிநீர் தொட்டி, மோட்டார் பழுது தண்ணீர் பற்றாக்குறையால் அவதி
குடிநீர் தொட்டி, மோட்டார் பழுது தண்ணீர் பற்றாக்குறையால் அவதி
ADDED : மே 23, 2025 02:39 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட ஹவுசிங் போர்டு பகுதியில், பழுதடைந்துள்ள சிறிய குடிநீர் தொட்டி மற்றும் மின்மோட்டாரை சீரமைக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
மதுராந்தகம் நகராட்சியில், ஆறாவது வார்டுக்கு உட்பட்ட ஹவுசிங் போர்டு பகுதிவாசிகளின் குடிநீர் தேவைக்காக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், 6 லட்சம் ரூபாய் மதிப்பில், சிறிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.
அருகே ஆழ்துளைக் கிணறு அமைத்து, மின் மோட்டார் அமைத்து குடிநீர் வசதி செய்யப்பட்டது.
சில மாதங்களாக இந்த குடிநீர் தொட்டி பயன்பாட்டில் இல்லாத நிலையில், மின்மோட்டாரும் பழுதடைந்து உள்ளது.
தற்போது கோடை வெயில் அதிகமாக உள்ள நிலையில், தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.
எனவே, ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள இந்த சிறிய குடிநீர் தொட்டியை சீரமைத்து, மின்மோட்டாரையும் பழுது நீக்கி, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர, மதுராந்தகம் நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.