/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ரயில் நிலையத்தில் 7 சிறுவர்கள் மீட்பு ரயில் நிலையத்தில் 7 சிறுவர்கள் மீட்பு
ரயில் நிலையத்தில் 7 சிறுவர்கள் மீட்பு
ரயில் நிலையத்தில் 7 சிறுவர்கள் மீட்பு
ரயில் நிலையத்தில் 7 சிறுவர்கள் மீட்பு
ADDED : மே 23, 2025 02:41 AM

சென்னை:மடிப்பாக்கம் மகாலட்சுமி நகரில், சிருங்கேரி வேத பாடசாலை உள்ளது. இங்கு மாணவர்கள் தங்கி, குருகுல முறையில் வேதங்களை பயின்று வருகின்றனர்.
இங்கு தங்கியிருந்த பீஹாரைச் சேர்ந்த ஏழு சிறுவர்கள், நேற்று முன்தினம் திடீரென மாயமாகினர். அவர்கள் ரயில் வாயிலாக, சொந்த மாநிலத்திற்கு செல்ல இருப்பதாக தகவல் கிடைத்தது.
பெரம்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. பெரம்பூர் ரயில் நிலையம் வந்த ஏழு சிறுவர்களையும், ரயில்வே போலீசார் மீட்டு, மடிப்பாக்கம் காவல் நிலைய போலீசாரிடம் நேற்று பத்திரமாக ஒப்படைத்தனர்.