/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கவனிக்கப்படாத கீழ்செம்பேடு சாலை கடும் சேதமடைந்து கிராமத்தினர் அவதி கவனிக்கப்படாத கீழ்செம்பேடு சாலை கடும் சேதமடைந்து கிராமத்தினர் அவதி
கவனிக்கப்படாத கீழ்செம்பேடு சாலை கடும் சேதமடைந்து கிராமத்தினர் அவதி
கவனிக்கப்படாத கீழ்செம்பேடு சாலை கடும் சேதமடைந்து கிராமத்தினர் அவதி
கவனிக்கப்படாத கீழ்செம்பேடு சாலை கடும் சேதமடைந்து கிராமத்தினர் அவதி
ADDED : ஜூன் 06, 2025 01:37 AM

அச்சிறுபாக்கம்:ஒரத்தி ஊராட்சியில் இருந்து கீழ்செம்பேடு கிராமத்திற்குச் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டு ஒரத்தி ஊராட்சி உள்ளது. ஒரத்தியிலிருந்து வேப்பங்கரணை செல்லும் சாலையில் இருந்து பிரிந்து, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகாவைச் சேர்ந்த கீழ்செம்பேடு கிராமத்திற்குச் செல்லும் தார்ச்சாலை உள்ளது.
இந்த சாலை அமுதுார், வெண்மந்தை, அப்பந்தாங்கல், காவணியாத்துார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் மிக முக்கிய சாலை.
இந்த சாலையை பயன்படுத்தி ஒரத்தி மேல்நிலைப் பள்ளிக்கு, நுாற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் மிதிவண்டியில் வந்து செல்கின்றனர்.
செங்கல்பட்டு, தாம்பரம் போன்ற வெளியூர் பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர் மற்றும் ஒரத்தி ஆரம்ப சுகாதார நிலையம், மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள், ஒரத்தி கிராமத்திற்குச் சென்று, அங்கிருந்து பேருந்தில் சென்று வருகின்றனர்.
இந்த சாலையை சீரமைக்காததால், செங்கல்பட்டு மாவட்ட எல்லையின் கடைசியில் உள்ள கிராமம் புறக்கணிக்கப்படுவதாக, பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, கீழ்செம்பேடு கிராமத்திற்குச் செல்லும் சாலையை ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிதாக தார்ச்சாலை அமைக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.