ADDED : ஜன 04, 2024 09:25 PM
மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் அருகே, துறையூர் பகுதியைச் சேர்ந்தவர் கவியரசன், 35. இவர், தன் 'ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர்' இருசக்கர வாகனத்தை, வீட்டின் முன்பு நிறுத்தி உள்ளார்.
பின், இருசக்கர வாகனத்தை எடுப்பதற்காக வெளியே வந்து பார்த்தபோது, வாகனம் திருடு போனது தெரிந்தது.
இது குறித்து, மதுராந்தகம் காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு, இருசக்கர வாகனத்தை திருடி சென்றவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.