/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தை பார்வையிட வந்த உலக வங்கி குழு'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தை பார்வையிட வந்த உலக வங்கி குழு
'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தை பார்வையிட வந்த உலக வங்கி குழு
'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தை பார்வையிட வந்த உலக வங்கி குழு
'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தை பார்வையிட வந்த உலக வங்கி குழு
ADDED : பிப் 25, 2024 02:08 AM

திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர், திருக்கழுக்குன்றம், புனித தோமையார் மலை ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த 119 ஊராட்சிகளில் 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டம் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டம், தனிநபர் மற்றும் குழு தொழில்களை உருவாக்குதல், ஏற்கனவே உள்ள தொழில்களை மேம்படுத்துதல் என, தொழில் முனைவோர்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.
திருப்போரூர் ஒன்றியத்தில் இத்திட்ட செயல்பாடுகளை பார்வையிடவும், கலந்துரையாடவும் நேற்று உலக வங்கி மேலாண் இயக்குனர் அன்னா ஜெர்டே மற்றும் உயர்மட்ட குழுவினர், திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலகத்திற்கு வந்தனர்.
இங்கு, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் உலக வங்கி குழுவினரை வரவேற்றனர். அலுவலக வளாகத்தில் பெண் தொழில் முனைவோர்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சியாக அமைக்கப்பட்டிருந்தன.
கண்காட்சிகள் குறித்தும், தொழில் முனைவோர்களுக்கான சேவைகள் குறித்தும் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலர் செந்தில் குமார், வாழ்ந்து காட்டுவோம் திட்ட முதன்மை செயலர் திவ்யதர்ஷினி ஆகியோர் விளக்கினர்.
தொடர்ந்து, உலக வங்கி குழுவினர் தண்டரையில் செயல்படும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் கலந்துரையாடி திட்டத்தின் மூலம் அடைந்த முன்னேற்ற நிலைகளை கேட்டறிந்தனர்.
அதேபோல், வங்கியாளர்கள் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்களுடன் கலந்துரையாடினர்.
இதில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு தொழில் கடன்கள் எந்தளவுக்கு எளிமையாக்கப்பட்டு உள்ளது.
வங்கியில் விண்ணப்பங்களை எளிதில் பரிசீலனை செய்வதற்கு, வாழ்ந்து காட்டுவோம் திட்டம் எந்தளவு பயனுள்ளதாக இருக்கிறது எனக் கேட்டறிந்தனர்.