/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
ADDED : ஜன 28, 2024 04:15 AM

செங்கல்பட்டு: தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு, செங்கல்பட்டு மாவட்டம் சார்பில், இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம், மாவட்ட கல்வி அலுவலகங்களில், பள்ளி துணை ஆய்வர் பதவி, பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு வழங்க வேண்டும்.
'ஜாக்டோ- - ஜியோ'வின் போராட்டம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனுவாசன் தலைமையில், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில், நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்தை மாநில துணை செயலர் முருகன் துவக்கி வைத்தார். இதில், 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.