புற்றுநோய்க்கு மனைவி பலி : சோகம் தாங்காமல் ஐ.பி.எஸ். அதிகாரி தற்கொலை
புற்றுநோய்க்கு மனைவி பலி : சோகம் தாங்காமல் ஐ.பி.எஸ். அதிகாரி தற்கொலை
புற்றுநோய்க்கு மனைவி பலி : சோகம் தாங்காமல் ஐ.பி.எஸ். அதிகாரி தற்கொலை
ADDED : ஜூன் 18, 2024 07:47 PM

கவுகாத்தி: புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த தன் மனைவி மருத்துவமனையில் இறந்ததால், துக்கம் தாங்காமல் ஐ.பி.எஸ்., அதிகாரி மருத்துவமனையிலேயே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அசாமில் நடைபெற்று உள்ளது.
அசாம் மாநிலம் சோனிட்புர் மாவட்ட எஸ்.பி.,யாக பணியாற்றி வந்தவர் சைலாதித்யா சைத்தியா. இவர் 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ். கேடர் ஆவார். இவரது மனைவி புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகியிருந்ததால், மனைவியை அருகில் இருந்து கவனித்து வர வேண்டி கடந்த 4 மாதமாக விடுமுறையில் இருந்தார்.
புற்றுநோய் முற்றிய நிலையில் எஸ்.பி.,யின் மனைவி கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் மருத்துவமனையில் ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று (18.06.2024) சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தார்.
இதையறிந்த சைலாதித்யா சைத்தியா, மனைவி இறந்த சோகம் தாங்காமல் மருத்துவமனை ஐ.சி.யூ. வளாகத்திலேயே தன் சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.