Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஏமாற்றிய காதலியை ‛‛ஸ்பானரால்'' அடித்தே கொன்ற காதலன்;

ஏமாற்றிய காதலியை ‛‛ஸ்பானரால்'' அடித்தே கொன்ற காதலன்;

ஏமாற்றிய காதலியை ‛‛ஸ்பானரால்'' அடித்தே கொன்ற காதலன்;

ஏமாற்றிய காதலியை ‛‛ஸ்பானரால்'' அடித்தே கொன்ற காதலன்;

ADDED : ஜூன் 18, 2024 10:26 PM


Google News
Latest Tamil News
மும்பை: மும்பையில் பட்டப்பகலில் பலர் முன்னிலையில் காதலியை ஸ்பானரால் அடித்தே கொன்ற கொடூர வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மும்பையின் கிழக்கே வசைவிரார் என்ற பகுதி முக்கிய சாலையில் இன்று பட்டபகலில், 20 வயது இளம் பெண் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த இளைஞன் தன் கையில் வைத்திருந்த ஒன்றரை அடி நீள ‛‛இரும்பு ஸ்பானரால்'' பெண்ணின் பின் தலையில் ஓங்கி அடித்தான். அவள் நிலைகுலைந்து கீழே விழுந்தும் திரும்ப திரும்ப அடித்ததில் அவர் ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

இதனை பலர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர செயலை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. இதன் வீடியோ இணைய தளத்தில் வைரலானது.

போலீசார் நடத்திய விசாரணையில், கொலையான பெண் பெயர் ஆர்த்தி, 20 என்பதும், இரக்கமின்றி கொடூரமாக கொலை செய்த இளைஞர் முன்னாள் காதலன் ரோஹித்யாதவ் என்பதும் தெரியவந்தது. தன்னை காதலித்து ஏமாற்றி விட்டு வேறு ஒருவருடன் ஆர்த்தி தொடர்பு வைத்த ஆத்திரத்தால் இக்கொடூர கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது. ரோஹித் யாதவை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us