/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வயல்வெளி எதிரே டாஸ்மாக் பழவூர் கிராமவாசிகள் தவிப்பு வயல்வெளி எதிரே டாஸ்மாக் பழவூர் கிராமவாசிகள் தவிப்பு
வயல்வெளி எதிரே டாஸ்மாக் பழவூர் கிராமவாசிகள் தவிப்பு
வயல்வெளி எதிரே டாஸ்மாக் பழவூர் கிராமவாசிகள் தவிப்பு
வயல்வெளி எதிரே டாஸ்மாக் பழவூர் கிராமவாசிகள் தவிப்பு
ADDED : மே 28, 2025 11:59 PM

சித்தாமூர், பழவூர் கிராமத்தில், வயல்வெளி அதிகமுள்ள பகுதியில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையால் பிரச்னை ஏற்படுவதால், கிராமத்தினர் தவித்து வருகின்றனர்.
சித்தாமூர் அருகே பழவூர் கிராமத்தில், பெருக்கரணை கிராமத்திற்குச் செல்லும் சாலையில், டாஸ்மாக் மதுக்கடை செயல்படுகிறது.
சித்தாமூர் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மது பிரியர்கள், இந்த கடையில் மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர்.
சிலர் மதுபானங்கள் வாங்கி, அங்குள்ள வயல்வெளிப் பகுதியில் அமர்ந்து குடித்துவிட்டு, காலி பாட்டில்களை வயல்வெளியில் வீசிச் செல்கின்றனர்.
இதனால் பாட்டில்கள் உடைந்து, விவசாய பணியில் ஈடுபடும் விவசாயிகளின் கால்களில் குத்தி காயம் ஏற்படுகிறது.
மேலும், குடிமகன்கள் தங்களது வாகனங்களை சாலையில் இஷ்டம் போல் நிறுத்திவிட்டு, வயல்வெளியில் அமர்ந்து குடிப்பதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் பெண்கள் அச்சப்படுகின்றனர்.
எனவே, டாஸ்மார்க் அதிகாரிகள் ஆய்வு செய்து, வயல்வெளிப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.