/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கூடுவாஞ்சேரி நகராட்சி சார்பில் முதல்வர் காப்பீடு திட்ட முகாம் கூடுவாஞ்சேரி நகராட்சி சார்பில் முதல்வர் காப்பீடு திட்ட முகாம்
கூடுவாஞ்சேரி நகராட்சி சார்பில் முதல்வர் காப்பீடு திட்ட முகாம்
கூடுவாஞ்சேரி நகராட்சி சார்பில் முதல்வர் காப்பீடு திட்ட முகாம்
கூடுவாஞ்சேரி நகராட்சி சார்பில் முதல்வர் காப்பீடு திட்ட முகாம்
ADDED : மே 29, 2025 12:00 AM

கூடுவாஞ்சேரி செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சியில், 30 வார்டுகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இங்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளை சேர்க்கும் வகையில், முகாம் நடத்த வேண்டுமென, கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்படி, நகராட்சி தலைவர் கார்த்திக், கமிஷனர் ராணி ஆகியோரின் முன்னெடுப்பில், நகராட்சி அலுவலகத்தில் நேற்று முகாம் நடத்தப்பட்டது.
இம்முகாம் ஜூன் 4ம் தேதி வரை, காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை நடைபெறும். காப்பீடு திட்டத்தில் சேர விரும்புவோர், ஆதார் அட்டை, வருமான சான்று மற்றும் ரேஷன் அட்டை ஆகிய சான்றுகளுடன் நேரில் வந்து, தங்கள் பெயரை பதிவு செய்யலாம்.
நேற்று முதல் நாள் முகாமில், 200 நபர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கூடுவாஞ்சேரி நகராட்சி தவிர, சுற்றுப்பகுதியில் வசிப்போரும் இம்முகாமில் பங்கேற்று, தங்கள் பெயரை பதிவு செய்யலாம்.