Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணியால் அவதி

பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணியால் அவதி

பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணியால் அவதி

பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணியால் அவதி

ADDED : ஜன 17, 2024 07:20 AM


Google News
Latest Tamil News
சித்தாமூர் : சித்தாமூர் அருகே, மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு நெடுஞ்சாலையில் இருந்து, அகரம் கிராமத்திற்கு செல்லும் 3 கிலோமீட்டர் துார தார்ச்சாலை உள்ளது.

சாலையை கயநல்லுார், அகரம், மாம்பாக்கம் ஆகிய கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பல ஆண்டுகளாக சாலை பழுதடைந்து, ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுவதால், தினமும் பள்ளி, கல்லுாரிகள் மற்றும் விவசாய வேலைக்கு செல்லும் மக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.

பழுதடைந்த சாலை, சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாக கட்டுப்பாட்டில் இருந்தது. அதன்பின், செங்கல்பட்டு கிராம சாலைகள் வட்டத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, சாலையை சீரமைக்க கடந்த ஜன., 30ம் தேதி 4.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த செப்., மாதம் பணி துவக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சாலை விரிவாக்க பணி நிறுத்தப்பட்டது.

சாலை அமைக்கப்படாமல், ஜல்லிகள் மட்டும் கொட்டப்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us