/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு செங்கையில் இன்று கருத்தரங்கு இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு செங்கையில் இன்று கருத்தரங்கு
இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு செங்கையில் இன்று கருத்தரங்கு
இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு செங்கையில் இன்று கருத்தரங்கு
இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு செங்கையில் இன்று கருத்தரங்கு
ADDED : செப் 11, 2025 09:38 PM
மறைமலை நகர்:செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் பயனடையும் வகையில், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் இன்று, இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடக்கிறது.
மறைமலை நகர் அடுத்த காட்டுப் பாக்கம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், செங்கல்பட்டு புறவழிச்சாலை அருகிலுள்ள வெங்கடேஷ்வரா திருமண மண்டபத்தில், 'இயற்கை விவசாயமும் கால்நடை வளர்ப்பும்' என்ற தலைப்பில், ஒருநாள் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி இன்று நடக்கிறது.
இதில், விவசாய பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்தல், மரபு சார் மருத்துவம் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்படும்.
பல்வேறு துறை வல்லுநர்கள், தோட்டக்கலை துணை இயக்குநர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.
இதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள், இளைஞர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தோர் பங்கேற்று பயனடையலாம்.