/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சிறு மழைக்கே மூழ்கிய சாலைகள் வண்டலுாரில் வடிகால் வசதியின்றி அவதி சிறு மழைக்கே மூழ்கிய சாலைகள் வண்டலுாரில் வடிகால் வசதியின்றி அவதி
சிறு மழைக்கே மூழ்கிய சாலைகள் வண்டலுாரில் வடிகால் வசதியின்றி அவதி
சிறு மழைக்கே மூழ்கிய சாலைகள் வண்டலுாரில் வடிகால் வசதியின்றி அவதி
சிறு மழைக்கே மூழ்கிய சாலைகள் வண்டலுாரில் வடிகால் வசதியின்றி அவதி
ADDED : செப் 11, 2025 01:58 AM

வண்டலுார்:வண்டலுாரில் வடிகால் வசதி இல்லாததால், நேற்று மாலை பெய்த அரை மணி நேர சிறு மழைக்கே, சாலையில் தண்ணீர் தேங்கி, அப்பகுதி மக்கள் சிரமப்பட்டனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சி 2,221 ஏக்கர் பரப்பில் உள்ளது. இங்குள்ள 15 வார்டுகளில், 40,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
ரயில் நிலையம், ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார் - வாலாஜாபாத் பிரதான சாலை, வெளிவட்ட சாலையை உள்ளடக்கிய வண்டலுாரில், புதிதாக வீடு கட்டி குடியேறுவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
ஆனால், மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த அடிப்படை கட்டுமானங்கள் இங்கு முறையாக இல்லை என, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக, வடிகால் வசதி இல்லாததால், நேற்று மாலை பெய்த அரை மணி நேர சிறு மழைக்கே, சாலையில் தண்ணீர் தேங்கியதால், மக்கள் சிரமப்பட்டனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:
பேரூராட்சிக்கு இணையான மக்கள் தொகை உள்ள வண்டலுார் ஊராட்சியில், அடிப்படை கட்டுமானங்கள் போதுமானதாக இல்லை. சாலைகள், கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால் வசதிகள் முறையாக இல்லை.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், சில தெருக்களில் மட்டும் கட்டப்பட்ட வடிகால்கள் அனைத்தும் துார்ந்து, பெயர்ந்து, நீரை கடத்தும் திறனற்ற நிலையில் உள்ளன.
தவிர, 80 சதவீத தெருக்களில் மழைநீர் வடிகால் வசதி இல்லை என்பதால், சிறு மழை பெய்தாலும், சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் இன்னலை சந்திக்கின்றனர். நேற்று மாலை பெய்த அரை மணி நேர சிறு மழைக்கே, சாலையில் தண்ணீர் தேங்கி, கடும் பாதிப்பு ஏற்பட்டது.
எனவே, அனைத்து தெருக்களிலும் சாலை, வடிகால் வசதி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.