/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/வருவாய் மாவட்ட பீச் வாலிபால் மாதவரம் அரசு பள்ளி முதலிடம்வருவாய் மாவட்ட பீச் வாலிபால் மாதவரம் அரசு பள்ளி முதலிடம்
வருவாய் மாவட்ட பீச் வாலிபால் மாதவரம் அரசு பள்ளி முதலிடம்
வருவாய் மாவட்ட பீச் வாலிபால் மாதவரம் அரசு பள்ளி முதலிடம்
வருவாய் மாவட்ட பீச் வாலிபால் மாதவரம் அரசு பள்ளி முதலிடம்
ADDED : ஜன 30, 2024 11:23 PM

சென்னை:தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில், வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.
அந்த வகையில், எழும்பூர், டான் பாஸ்கோ பள்ளி சார்பில், 14 வயதினருக்கான பீச் வாலிபால் போட்டி, பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
மாணவியருக்கான இப்போட்டியில், பல்வேறு மண்டலங்களில் வெற்றி பெற்ற 29 அணிகள் பங்கேற்றன. ஒரு அணியில் இருவர் மட்டுமே பங்கேற்ற இப்போட்டிகள் அனைத்தும், 'நாக் அவுட்' முறையில் நடந்தன.
இதைத் தொடர்ந்து இறுதி போட்டியில், மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள சென்னை அரசு பெண்கள் பள்ளி மற்றும் முகப்பேர் வேலம்மாள் அணிகள் மோதின.
விறுவிறுபான இப்போட்டியில், 15 - 8, 15 - 10 என்ற நேர் 'செட்' கணக்கில், சென்னை அரசு பள்ளி மாணவியர் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்து அசத்தினர்.
தொடர்ந்து, மூன்றாம் இடத்தை, ராயபுரம் கலைமகள் பள்ளி அணி கைப்பற்றியது.