/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/உயரழுத்த மின்கம்பம் அமைக்க கொளத்துார் வாசிகள் எதிர்ப்புஉயரழுத்த மின்கம்பம் அமைக்க கொளத்துார் வாசிகள் எதிர்ப்பு
உயரழுத்த மின்கம்பம் அமைக்க கொளத்துார் வாசிகள் எதிர்ப்பு
உயரழுத்த மின்கம்பம் அமைக்க கொளத்துார் வாசிகள் எதிர்ப்பு
உயரழுத்த மின்கம்பம் அமைக்க கொளத்துார் வாசிகள் எதிர்ப்பு
ADDED : பிப் 06, 2024 04:24 AM

சித்தாமூர் : சித்தாமூர் அருகே கொளத்துார் கிராமத்தில் புதிய கல் குவாரி துவங்குவதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
சித்தாமூர் சாலையில் இருந்து கல் குவாரிக்கு. 11 கி.வோ., திறன் கொண்ட உயரழுத்த மின்சாரம் வழங்க, நேற்று அதிகாரிகள் மின்கம்பம் நட பள்ளம் தோண்டினர். இதற்கு கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:
ஏற்கனவே சாலை குறுகலாக உள்ளது. மின்கம்பங்கள் மூலமாக உயரழுத்த மின்கம்பிகள் அமைத்தால், சாலையில் செல்லும் வாகனங்கள் மின்கம்பத்தில் மோதி, விபத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது.
மேலும், குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், மின் கம்பிகளை நிலத்தில் புதைத்து எடுத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதன்பின், மின்துறை அதிகாரிகள் மின்கம்பங்கள் அமைக்காமல் திரும்பிச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தினர். பின், எதிர்ப்பு தெரிவித்த கிராமத்தினர் கலைந்து சென்றனர்.