/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பைக், பணம் பறித்த 3 வாலிபர்களுக்கு 'காப்பு' பைக், பணம் பறித்த 3 வாலிபர்களுக்கு 'காப்பு'
பைக், பணம் பறித்த 3 வாலிபர்களுக்கு 'காப்பு'
பைக், பணம் பறித்த 3 வாலிபர்களுக்கு 'காப்பு'
பைக், பணம் பறித்த 3 வாலிபர்களுக்கு 'காப்பு'
ADDED : செப் 14, 2025 11:22 PM

மப்பேடு;மப்பேடு அருகே வாலிபரை தாக்கி, பைக் மற்றும் 350 ரூபாயை பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.
கடம்பத்துார் ஒன்றியம் புதுமாவிலங்கை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ், 28. இவர், கடந்த 12ம் தேதி இரவு 'ஸ்பிளண்டர்' பைக்கில், நண்பர் முரளி என்பவருடன் பேரம்பாக்கம் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சத்தரை வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே வந்த போது, பின்னால் டி.வி.எஸ்., ஸ்கூட்டரில் வந்த மூவர் வழிமறித்து, பைக் மற்றும் 350 ரூபாயை பறித்து சென்றனர்.
நேற்று முன்தினம் ராஜேஷ் அளித்த புகாரின்படி, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். விசாரணையில், கசவநல்லாத்துார் பகுதியைச் சேர்ந்த நாகராஜ், 26, பிரியாதமிழரசன், 26 மற்றும் அகரம் மகேஷ், 19, ஆகியோர் என தெரிய வந்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் மப்பேடு போலீசார் மூவரையும் கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.