/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/சிறுபாலம், சாலை பணிக்கு பூஜை தண்ணீர் தேங்குவதற்கு விடிவுசிறுபாலம், சாலை பணிக்கு பூஜை தண்ணீர் தேங்குவதற்கு விடிவு
சிறுபாலம், சாலை பணிக்கு பூஜை தண்ணீர் தேங்குவதற்கு விடிவு
சிறுபாலம், சாலை பணிக்கு பூஜை தண்ணீர் தேங்குவதற்கு விடிவு
சிறுபாலம், சாலை பணிக்கு பூஜை தண்ணீர் தேங்குவதற்கு விடிவு
ADDED : பிப் 25, 2024 01:18 AM

கூடுவாஞ்சேரி,:நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, 27வது வார்டுக்கு உட்பட்ட கே.கே.நகர் பகுதியில், எட்டுக்கும் மேற்பட்ட தெருக்களில், மழை காலங்களில் மழைநீர் செல்ல வழியின்றி, கால்வாயில் தேக்கமடைந்து, இப்பகுதி வாசிகள் சிரமம் அடைந்தனர்.
இதுதொடர்பாக, 27வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் கலைச்செல்வன், நகராட்சி தலைவர் கார்த்திக், நகராட்சி கமிஷனர் தாமோதரன் ஆகியோருக்கு புகார் மனு அளித்திருந்தார்.
அதன்படி, நகராட்சி தலைவர், கமிஷனர், பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் ஆய்வுகள் மேற்கொண்டு, சேதமான சாலை மற்றும் மழைநீர் சீராக செல்வதற்கு, எட்டு இடங்களில் சிறிய தரைப்பாலங்கள் கட்டுவதற்கு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது .
இதைத் தொடர்ந்து, இப்பணிகளுக்காக நேற்று பூமி பூஜை நடைபெற்றது.
இதுகுறித்து நகராட்சி தலைவர் கார்த்திக் கூறுகையில், 'இரண்டு மாதத்திற்குள், சாலை மற்றும் சிறு தரைப்பால பணிகள் நிறைவடைந்து விடும். இனிவரும் மழைக்காலங்களில், இப்பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது' என்றார்.