/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ காயரம்பேடு ஊராட்சியில் வரும் 9ம் தேதி மின் தடை காயரம்பேடு ஊராட்சியில் வரும் 9ம் தேதி மின் தடை
காயரம்பேடு ஊராட்சியில் வரும் 9ம் தேதி மின் தடை
காயரம்பேடு ஊராட்சியில் வரும் 9ம் தேதி மின் தடை
காயரம்பேடு ஊராட்சியில் வரும் 9ம் தேதி மின் தடை
ADDED : ஜூன் 05, 2025 09:18 PM
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு ஊராட்சி மற்றும் சுற்றுப்பகுதியில், மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக, வரும் 9ம் தேதி மின் வினியோகம் தடை செய்யப்படும் என, மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மறைமலை நகர், மின் கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
காயரம்பேடு 33/11 கே.வி., துணை மின் நிலையத்தின் கீழ் உள்ள பெருமாட்டுநல்லுார் மின்னுாட்டியில், வரும் 9ம் தேதி,மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
எனவே, காயரம்பேடு சிலம்பொலி நகர், பெருமாட்டு நல்லுார் எஸ்.ஐ.எஸ்., விஷ்ணுபிரியா நகர், தங்கப்பாபுரம், மூலக்கழனி, சுவாதி நகர், வரதராஜ நகர் ஆகிய பகுதிகளில் வரும் 9ம் தேதி காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரையில், மின் வினியோகம் நிறுத்தப்படும்.
தவிர அன்றைய தினம், காந்தி நகர், செல்வி நகர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளிலும், காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரையில், மின் வினியோகம் நிறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.