/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/துாய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்க அனுமதிதுாய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்க அனுமதி
துாய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்க அனுமதி
துாய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்க அனுமதி
துாய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்க அனுமதி
ADDED : ஜன 17, 2024 07:18 AM
செங்கல்பட்டு : செங்கல்பட்டு நகராட்சி பணியாளர்களுக்கு சீருடை வழங்க நகராட்சி கூட்டத்தில் அனுமதி வழங்கியது.
செங்கல்பட்டு நகராட்சியில், பொது சுகாதார பிரிவில், துாய்மை பணியாளர்கள் மற்றும் துாய்மை மேற்பார்வையாளர்கள், ஓட்டுனர்கள் என, 86 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு, ஆண்டுதோறும் சீருடை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு, சீருடை, காலணிகள், கம்ப்ட், கையுரை, டவல், ஒளிரும் மேல்சட்டை ஆகியவற்றை, அரசு பதிவு பெற்ற நிறுவனத்தில், 5 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்க, நகராட்சி கூட்டத்தில், ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது.
இதை வாங்க, நகராட்சி அனுமதி வழங்கி, தீர்மானம் நிறைவேற்றியது.


