/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சமுதாய நலக்கூடம் அமைக்க செய்யூர் மக்கள் எதிர்பார்ப்பு சமுதாய நலக்கூடம் அமைக்க செய்யூர் மக்கள் எதிர்பார்ப்பு
சமுதாய நலக்கூடம் அமைக்க செய்யூர் மக்கள் எதிர்பார்ப்பு
சமுதாய நலக்கூடம் அமைக்க செய்யூர் மக்கள் எதிர்பார்ப்பு
சமுதாய நலக்கூடம் அமைக்க செய்யூர் மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : செப் 21, 2025 11:10 PM
செய்யூர்:லத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் பெரிய ஊராட்சியாக செய்யூர் உள்ளது. வடக்கு செய்யூர், மேற்கு செய்யூர், சால்ட் காலனி, தேவராஜபுரம், பாளையார்மடம், புத்துார் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய செய்யூர் ஊராட்சியில், 8,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
அதிக மக்கள் வசித்து வரும் இந்த ஊராட்சியில், சமுதாய நலக்கூடம் இல்லாததால், அப்பகுதி மக்கள் தங்கள் குடும்ப சுப நிகழ்ச்சிகளை நடத்த, தனியார் மண்டபங்களை தேடி செல்லும் நிலை உள்ளது.
தனியார் மண்டபத்தில் அதிக கட்டணம் கேட்பதால், ஏழை எளிய மக்கள் குடும்ப சுப நிகழ்ச்சிகளை நடத்த அவதிப்படுகின்றனர்.
ஆகையால், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, செய்யூர் ஊராட்சியில் புதிய சமுதாய நலக்கூடம் அமைத்து, அதன் மூலம் ஊராட்சிக்கு வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.