/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சிறுங்குன்றம் கிராமத்தில் வி.ஏ.ஓ., இல்லாததால் மக்கள் அவதி சிறுங்குன்றம் கிராமத்தில் வி.ஏ.ஓ., இல்லாததால் மக்கள் அவதி
சிறுங்குன்றம் கிராமத்தில் வி.ஏ.ஓ., இல்லாததால் மக்கள் அவதி
சிறுங்குன்றம் கிராமத்தில் வி.ஏ.ஓ., இல்லாததால் மக்கள் அவதி
சிறுங்குன்றம் கிராமத்தில் வி.ஏ.ஓ., இல்லாததால் மக்கள் அவதி
ADDED : ஜூன் 18, 2025 07:04 PM
திருப்போரூர்:சிறுங்குன்றம் கிராமத்தில் வி.ஏ.ஓ., பணியிடம் நிரப்பாததால் கிராம மக்கள், மாணவ- மாணவியர் பல்வேறு இன்னலுக்கு ஆளாகின்றனர்.
திருப்போரூர் ஒன்றியம் சிறுங்குன்றம் ஊராட்சியில் சிறுங்குன்றம், மருதேரி ஆகிய இரு கிராமங்கள் உள்ளன. இரு கிராமங்கள் சிறுங்குன்றம் வி.ஏ.ஓ., கட்டுப்பாட்டில் உள்ளது.
இக்கிராமத்தில் பணிபுரிந்த வி.ஏ.ஓ., இரண்டு மாத்திற்கு முன் விபத்தில் இறந்தார். அதன் பிறகு அங்கு யாரையும் நியமிக்கவில்லை.
தற்போது பள்ளி, கல்லுாரிகள் திறந்து செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் இருப்பிடச் சான்று, வருமானச் சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் வாங்க அலைகின்றனர்.
அதேபோல், சிறுங்குன்றம், மருதேரி கிராம விவசாயிகள் சிட்டா, அடங்கல் போன்ற பல்வேறு ஆவணங்களை பெற வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு செல்கின்றனர்.
சிறுங்குன்றத்தில் வி.ஏ.ஓ., இல்லாததால், அனுமந்தபுரம் மற்றும் நெல்லிக்குப்பம் கிராமத்திற்கு செல்கின்றனர். இதனால், 10 முதல் 30 கி.மீ., துாரம் வரை விவசாயிகள் அலைந்து திரிந்து வருகின்றனர்.
எனவே சிறுங்குன்றத்தில் காலியாக உள்ள வி.ஏ.ஓ., பணியிடத்தை நிரப்ப வேண்டும் அல்லது தற்காலிகமாவது பொறுப்பு பணியில் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.