/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ காட்டாங்கொளத்துாரில் ரயில் மோதி ஒருவர் பலி காட்டாங்கொளத்துாரில் ரயில் மோதி ஒருவர் பலி
காட்டாங்கொளத்துாரில் ரயில் மோதி ஒருவர் பலி
காட்டாங்கொளத்துாரில் ரயில் மோதி ஒருவர் பலி
காட்டாங்கொளத்துாரில் ரயில் மோதி ஒருவர் பலி
ADDED : மே 20, 2025 09:18 PM
மறைமலைநகர்,:மறைமலைநகர் அடுத்த காட்டாங்கொளத்துார், மாருதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், 46.
காட்டுப்பாக்கம் பகுதியில் உள்ள அரசு கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்தார்.
இவர், கடந்த சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்பு ஏற்பட்டு, வலது கை மற்றும் இடது கால் செயலிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று காலை, காட்டாங்கொளத்துார் ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது, சென்னையில் இருந்து தென் மாவட்டம் நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத விரைவு ரயில், ஸ்ரீதர் மீது மோதியது. இதில் அவர், சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் ரயில்வே போலீசார், ஸ்ரீதரின் உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.