Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/குளோரினேட் செய்யப்படாத குடிநீர் வினியோகம்...நோய் அபாயம்!:செங்கை ஊராட்சிகளில் அதிகாரிகள் அலட்சியம்

குளோரினேட் செய்யப்படாத குடிநீர் வினியோகம்...நோய் அபாயம்!:செங்கை ஊராட்சிகளில் அதிகாரிகள் அலட்சியம்

குளோரினேட் செய்யப்படாத குடிநீர் வினியோகம்...நோய் அபாயம்!:செங்கை ஊராட்சிகளில் அதிகாரிகள் அலட்சியம்

குளோரினேட் செய்யப்படாத குடிநீர் வினியோகம்...நோய் அபாயம்!:செங்கை ஊராட்சிகளில் அதிகாரிகள் அலட்சியம்

ADDED : ஜூன் 13, 2024 12:06 AM


Google News
Latest Tamil News
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிகளில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் முறையாகபராமரிக்கப்படாததால், சுகாதாரமற்ற குடிநீர் வினியோகிக்கப்படுவதாக, பல இடங்களில்அதிருப்தி நிலவுகிறது. நீர்த்தேக்க தொட்டிகளை பராமரிப்பதில் உள்ளாட்சி நிர்வாகங்கள் அலட்சியமாக செயல்படுவதாக, பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.

இந்த ஊராட்சிகளில், கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் ஏற்றப்படுகிறது. அதன்பின், குழாய்கள் வாயிலாக, தினமும் குளோரின் கலந்து, பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும்.

ஊராட்சிகளில் இரண்டு முறை, குடிநீர் வினியோகம் செய்தாலும், குளோரின் கலந்து வினியோகம் செய்ய வேண்டும்.

குடிநீர் வினியோகம் செய்வதற்கு, நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர், தொட்டியை துாய்மையாக பராமரிப்பதற்கு, துாய்மை பணியாளர் ஒருவர் என, ஊராட்சிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஊராட்சிகளில், குடிநீரில் குளோரின் கலந்து வினியோகம் செய்யப்படுகிறதா என, சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

இதுமட்டும் இன்றி, மேல்நிலை தொட்டிகளை, 15 நாளுக்கு ஒரு முறை, ஊராட்சி நிர்வாகம் சுத்தம் செய்ய வேண்டும்.

சுத்தம் செய்த நாள், சுத்தம் செய்யப்பட வேண்டிய நாள் ஆகியவற்றை, மேல்நிலை தொட்டி பகுதியில் எழுத வேண்டும். மேல்நிலை தொட்டிகள் உள்ள பகுதியில், முட்செடிகள் இல்லாமல், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்வதற்கு வசதியாக இடம், துாய்மையாக இருக்க வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டியது, ஊராட்சி நிர்வாகத்தின் கட்டாய கடமையாகும். ஆனால், மாவட்டத்தில், சிங்கபெருமாள் கோவில், கொண்டமங்கலம்,ஒழலுார், ஆத்துார், திருமணி, மெய்யூர், மாமண்டூர், சிதண்டிமண்டபம், உள்ளிட்ட பெரும்பாலான ஊராட்சி நிர்வாகத்தினர் சுத்தம் செய்யாமல்குடிநீர் வினியோகம் செய்கின்றனர். ஒரு சில ஊராட்சிகளில் மட்டுமே, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

ஆனால், ஊராட்சிகளில், சுகாதார ஆய்வாளர்கள், குடிநீரில் குளோரின் கலந்து வினியோகம் செய்யப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தற்போது, அடிக்கடி மழை பெய்வதால், குளோரின் கலந்து, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படாததால், தண்ணீரில் பரவக்கூடிய காய்ச்சல் மற்றும் வயிற்று போக்கு, காலரா உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் பரவும் சூழல் உள்ளது.

பொதுமக்களுக்கு குளோரினேட் செய்யப்பட்ட பாதுகாப்பான, சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்

மேல்நிலைத் தொட்டிகள் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யும்போது, குளோரினேட் கலந்து, குடிநீர் வினியோகம் செய்யவில்லை. குடிநீர் தொட்டிகள், 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். இதனை, முறையாக ஊராட்சி நிர்வாகங்கள் செயல்படுத்தவில்லை. அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஜெ.லுாயிஸ்ராஜ்,

சமூக ஆர்வலர்,

செங்கல்பட்டு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us