Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கை ஜமாபந்தியில் மனுக்களுடன் திரண்ட மக்கள்

செங்கை ஜமாபந்தியில் மனுக்களுடன் திரண்ட மக்கள்

செங்கை ஜமாபந்தியில் மனுக்களுடன் திரண்ட மக்கள்

செங்கை ஜமாபந்தியில் மனுக்களுடன் திரண்ட மக்கள்

ADDED : ஜூன் 13, 2024 12:09 AM


Google News
Latest Tamil News
செங்கல்பட்டு:செங்கல்பட்டில் நடந்த ஜமாபந்தியில், இலவச வீட்டுமனை பட்டா உட்பட, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 145 மனுக்கள் நேற்று வரப்பெற்றன.

கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி முன்னிலை வகித்தார்.

செங்கல்பட்டு குறுவட்டத்தில் உள்ள 26 கிராமங்களை சேர்ந்தோர், இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம் உள்ளிட்ட145 மனுக்கள்வழங்கினர்.

இந்த மனுக்களை பரிசீலித்து, உடனடியாக தீர்வு வழங்க, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன்பின், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், சமூக பொறுப்பு நிதியின் கீழ், ஒரு மாற்றுத்திறனாளிக்கு செயற்கை கால், இரண்டு பேருக்கு காதொலி கருவிகளை கலெக்டர் வழங்கினார்.

திருப்போரூரில் நடந்த ஜமாபந்தியில், சப் - கலெக்டர் நாராயணசர்மா தலைமை தாங்கினார்.

திருப்போரூர்வட்டாட்சியர்வெங்கட் ரமணன், எம்.எல்.ஏ., பாலாஜிமுன்னிலைவகித்தனர்.

திருப்போரூர்உள்வட்டத்தில்அடங்கிய திருப் போரூர், தண்டலம், ஆலத்துார் உள்ளிட்ட 17 கிராமங்களை சேர்ந்த, 205 பேர் மனுக்கள் அளித்தனர்.

இன்று, நெல்லிக்குப்பம் உள்வட்டத்திற்கான ஜமாபந்தி நடைபெறுகிறது.

ஜமாபந்தியில்,மண்டல துணை வட்டாட்சியர் ஜீவிதா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

வண்டலுாரில் நடந்த ஜமாபந்தியில், மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில், தாசில்தார் புஷ்பலதா உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், 124 மனுக்கள் வரப்பெற்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us