/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூன் 08, 2025 01:40 AM

கூவத்துார்:கூவத்துார் அடுத்த கடலுார் பகுதியில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடலுார் பெரியகுப்பம் மற்றும் கடலுார் சின்னகுப்பத்தை இணைக்கும் 450 மீட்டர் நீள தார் சாலை உள்ளது.
சாலையை கடலுார் பெரியகுப்பம், கடலுார் சின்னகுப்பம் மற்றும் ஆலிகுப்பம் உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.
பள்ளி, கல்லுாரி மற்றும் விவசாய வேலைக்கு செல்பவர்கள் என ஏராளமானோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலை ஜல்லிகள் பெயர்ந்து, ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு பழுதடைந்து உள்ளது. இதனால் இரவு நேரத்தில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகின்றனர். மேலும் மழைகாலத்தில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கடலுார் பெரியகுப்பத்தில் செயல்படும் அரசு துவக்கபள்ளிக்கு செல்லும் மாணவர்களும் சிரமப்படுகின்றனர். ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.