/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
ADDED : ஜூன் 11, 2025 10:14 PM
சென்னை:தாம்பரத்தை அடுத்த செம்பாக்கத்தில், பிரசித்தி பெற்ற செங்கோதி அம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் கோவிலை பூட்டிவிட்டுச் சென்றனர்.
நள்ளிரவு, கோவிலின் 'கேட்'டை லாவகமாக திறந்த மர்ம நபர்கள், நுழைவாயில் முன் இருந்த உண்டியலை திருடிச் சென்றனர். பின், உண்டியல் பூட்டை உடைத்து, அதிலிருந்த பணத்தை திருடிய மர்ம நபர்கள், 2 கி.மீ., துாரத்தில் உண்டியலை சாலையில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.
நேற்று காலை தகவலறிந்த போலீசார், சாலையில் வீசப்பட்ட காலி உண்டியலை மீட்டனர். இது தொடர்பாக, சேலையூர் போலீசார் வழக்கு பதிந்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து, திருடர்களை தேடி வருகின்றனர்.