/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பேருந்து நிறுத்த நிழற்குடையின்றி இல்லீடு கிராமத்தினர் தவிப்பு பேருந்து நிறுத்த நிழற்குடையின்றி இல்லீடு கிராமத்தினர் தவிப்பு
பேருந்து நிறுத்த நிழற்குடையின்றி இல்லீடு கிராமத்தினர் தவிப்பு
பேருந்து நிறுத்த நிழற்குடையின்றி இல்லீடு கிராமத்தினர் தவிப்பு
பேருந்து நிறுத்த நிழற்குடையின்றி இல்லீடு கிராமத்தினர் தவிப்பு
ADDED : ஜூன் 19, 2025 06:44 PM
சூணாம்பேடு:சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட இல்லீடு கிராமத்தில், மதுராந்தம் - சூணாம்பேடு மாநில நெடுஞ்சாலை ஓரத்தில், பேருந்து நிறுத்தம் உள்ளது.
மதுராந்தகம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை மற்றும் புதுச்சேரி போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள், இங்கு நின்று செல்கின்றன.
இல்லீடு பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துணைமின் நிலையம் மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன.
இதனால், தினமும் ஏராளமான பொதுமக்கள், இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த பேருந்து நிறுத்த நிழற்குடை பழுதடைந்ததால், கடந்த ஆண்டு இடித்து அகற்றப்பட்டது.
தற்போது வரை புதிய நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளதால், மதிய நேரத்தில் பயணியர் பேருந்திற்காக வெயிலில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அவதிப்படுகின்றனர்.
துறை சார்ந்த அதிகாரிகள் இல்லீடு பகுதியில் புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.