ADDED : செப் 10, 2025 03:06 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு ஆத்துார் பேருந்து நிறுத்தம் அருகில் அரசு பேருந்தின் சக்கரம் உடைந்து விபத்து ஏற்பட்டது.
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு அரசு பேருந்து தடம் எண் 212பி என்ற பேருந்து நேற்று 40 பயணியருடன் சென்று கொண்டிருந்தது.
செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையில் ஆத்துார் டீ கடை பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்று பயணியரை ஏற்றிவிட்டு, மீண்டும் செல்லும் போது பேருந்தின் முன் பக்கத்தில் உள்ள வலது பக்க சக்கரம் உடைந்தது. இதையடுத்து, பயணியர் அலறியடித்து பேருந்தில் இருந்து உடனடியாக இறங்கினர். பயணியர் மாற்று பேருந்தில் அ னுப்பி வைக்கப்பட்டனர்.