/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே எரிவாயு தகன மேடைக்கு பூட்டு திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே எரிவாயு தகன மேடைக்கு பூட்டு
திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே எரிவாயு தகன மேடைக்கு பூட்டு
திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே எரிவாயு தகன மேடைக்கு பூட்டு
திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே எரிவாயு தகன மேடைக்கு பூட்டு
ADDED : ஜூன் 14, 2025 01:05 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் அமைக்கப்பட்ட, நவீன எரிவாயு தகன மேடை, திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே, பழுது காரணமாக மூடப்பட்டு உள்ளது.
அச்சிறுபாக்கம் பேரூராட்சியில், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச் சாலையில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2022 -- 23ம் ஆண்டில், 1.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நவீன வசதிகளுடன் கூடிய எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது.
பின், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பிணங்களை எரித்து, காற்றில் பரவும் புகையின் நச்சுச் தன்மையின் அளவை கண்டறிந்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சான்று பெறப்பட்டது.
இதையடுத்து, கடந்த மூன்று மாதங்களுக்கு முன், நவீன எரிவாயு தகன மேடையில், 3,000 ரூபாய் என்ற குறைந்த கட்டணத்தில், உடல்கள் எரிக்கப்பட்டன.
இது, அச்சிறுபாக்கம் பகுதியில் உள்ளவர்களுக்கு உதவியாக இருந்தது.
தற்போது, எரிவாயு தகன மேடையில் சிலிண்டர் காஸ் கசிவு, உடல்களை உள்ளே அனுப்பும் 'டிராலி' மற்றும் 'ஷட்டர்' பகுதி பழுது காரணமாக, எரிவாயு தகன மேடை செயல்படாமல் பூட்டப்பட்டுள்ளது.
இதனால், இறந்தவர்களின் உடல்களை வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும்படி, பேரூராட்சி நிர்வாகத்தினர், பொது மக்களை நிர்பந்திக்கின்றனர்.
இதனால், அதிக செலவு ஏற்படுவதாக, பகுதிவாசிகள் புலம்புகின்றனர். மேலும், நவீன எரிவாயு தகன மேடையில் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர், இது குறித்து உரிய ஆய்வு செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.