ADDED : ஜன 17, 2024 07:24 AM

அச்சிறுபாக்கம் : அச்சிறுபாக்கம் அருகே ஆத்துார் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடியை தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடக்கின்றன.
பொங்கல் பண்டிகையை ஒட்டி கடந்த ஜன., 13ல், 58,845, ஜன., 14ல் - 46,395, ஜன. 15ல் -30,725 வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலையின் இரு மார்க்கத்திலும் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில், சுங்கச்சாவடி ஓரம் டீ கப், பிளாஸ்டிக் கழிவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட திண்பண்டங்களின் கழிவுகள் கொட்டப்படுவதால், துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என, பேருந்து பயணியர் கோரிக்கை விடுக்கின்றனர்.


