/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/8 வயது மகனை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது; 'ஆன்லைன்' சூதாட்டத்தால் விபரீதம்8 வயது மகனை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது; 'ஆன்லைன்' சூதாட்டத்தால் விபரீதம்
8 வயது மகனை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது; 'ஆன்லைன்' சூதாட்டத்தால் விபரீதம்
8 வயது மகனை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது; 'ஆன்லைன்' சூதாட்டத்தால் விபரீதம்
8 வயது மகனை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது; 'ஆன்லைன்' சூதாட்டத்தால் விபரீதம்
ADDED : ஜன 07, 2024 11:22 PM

தாம்பரம் : ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் பெண்டியாலா கிருஷ்ண சைதன்யா, 33; தாம்பரம் விமானப்படை பயிற்சி மைய சமையல்காரர்.
இவர், தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், பார்வதி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி வைதேகி, 33, மகன்கள் பத்ரி, 8, கவுஷிக், 4, ஆகியோருடன் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, கணவன் - மனைவி இருவரும் தனித்தனி அறையில் துாங்கினர். மூத்த மகன் பத்ரியை சைதன்யா தன்னுடன் துாங்க வைத்துள்ளார். அப்போது, பத்ரியை துாக்கிட்டு கொலை செய்து விட்டு, சைதன்யா மெரினா கடற்கரைக்கு சென்றார்.
அங்கு, மொபைல்போன் வாயிலாக நண்பர்களிடம் நடந்தவற்றை கூறி, தானும் தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள், சேலையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
மொபைல் போன் சிக்னல் மூலம், மெரினா கடற்கரையில் தற்கொலை செய்ய முயன்ற சைதன்யாவை போலீசார் பிடித்து, சேலையூர் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
விசாரணையில் தெரிய வந்ததாவது:
ஆன்லைன் சூதாட்டத்தால் பல லட்சம் ரூபாய் சைதன்யா இழந்துள்ளார். இதனால், கடன் வாங்கி வட்டி கட்ட முடியாமல் கடன் பிரச்னையில் தவித்து வந்துள்ளார்.
தற்கொலை செய்து கொண்டால், மனைவிக்கு அந்த வேலை கிடைக்கும் என நினைத்த சைதன்யா, தன்னிடம் அதிகம் பாசம் வைத்திருந்த மகன் பத்ரியை கொலை செய்து, தானும் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.