Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ஏரியில் மூழ்கி தந்தை - மகள் பலி

ஏரியில் மூழ்கி தந்தை - மகள் பலி

ஏரியில் மூழ்கி தந்தை - மகள் பலி

ஏரியில் மூழ்கி தந்தை - மகள் பலி

ADDED : பிப் 25, 2024 01:41 AM


Google News
Latest Tamil News
மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த பேரமனுார் விவேகானந்தர் நகரைச் சேர்ந்தவர் மதன், 38. மறைமலை நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

நேற்று காலை மதனும், அவரது மகள் தன்யா, 5, மற்றும் மூன்று குழந்தைகளுடன், வீட்டின் அருகில் உள்ள பனங்கொட்டூர் ஏரியில் குளிக்கச் சென்றார்.

இதையடுத்து, ஏரியில் அனைவரும் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தன்யா நீரில் மூழ்கினார். மகளை காப்பாற்ற முயன்ற மதனும் நீரில் மூழ்கினார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிராம மக்கள், தன்யாவின் உடலை மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மறைமலை நகர் தீயணைப்பு வீரர்கள், ரப்பர் படகு மூலம் நீண்ட நேரம் தேடி மதனின் உடலை மீட்டனர்.

இருவரின் உடலையும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, மறைமலை நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us