/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மேலப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க எதிர்பார்ப்பு மேலப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க எதிர்பார்ப்பு
மேலப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க எதிர்பார்ப்பு
மேலப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க எதிர்பார்ப்பு
மேலப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : மார் 22, 2025 11:26 PM
செய்யூர், செய்யூர் அடுத்த மேலப்பட்டு கிராமத்தில் செய்யூர்-பவுஞ்சூர் சாலையில் பேருந்து நிறுத்தம் உள்ளது.
தனியார் மற்றும் அரசு பேருந்து என 5க்கும் மேற்பட்ட பேருந்து இந்த பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்கின்றன.
சிறுவங்குணம்,மேலப்பட்டு உள்ளிட்ட கிராம மக்கள் செய்யூர், பவுஞ்சூர், மதுராந்தகம், கூவத்துார் போன்ற பகுதிகளுக்கு செல்ல பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர்.
பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள் என ஏராளமானோர் இந்த பேருந்து நிறுத்தத்திற்கு வந்து செல்கின்றனர்.
பல ஆண்டுகளாக இந்த பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை வசதி இல்லாததால்,கோடை காலத்தில் பொதுமக்கள் வெயிலில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவியர் அமர இடமின்றி அவதிப்படுகின்றனர்.
எனவே ஊராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து, பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.
*************