/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சோத்துப்பாக்கத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு சோத்துப்பாக்கத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு
சோத்துப்பாக்கத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு
சோத்துப்பாக்கத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு
சோத்துப்பாக்கத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு
ADDED : மார் 22, 2025 11:26 PM

மேல்மருவத்துார், சித்தாமூர் ஒன்றியம், சோத்துப்பாக்கம் ஊராட்சியில் துாய்மை பாரத இயக்கம், ஊரகம் திட்டம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மஞ்சப்பை இயக்கத்தினர் இணைந்து, நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
ஊராட்சி தலைவர் ஸ்ரீதர், வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தனர்.
வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணன், நெகிழி கழிவுகள் குறைப்பது, திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் குறித்தும், வீடுகளில் உருவாகும் குப்பைகளை ஈரக் கழிவுகள் மற்றும் உலர் கழிவுகள் மக்காத குப்பை என பிரித்து வழங்குவது என செய்முறை விளக்கத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தடை செய்யப்பட்ட நெகிழி கழிவுகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஊராட்சி நிர்வாகத்தின் வாயிலாக அபராதம் விதிக்கப்பட்டது.
வியாபாரிகள் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி கழிவுகளையும், தடை செய்யப்பட்ட நெகிழி கழிவுகளையும் பயன்படுத்தக் கூடாது என்றும், ஊராட்சிகள் சட்டத்தின் படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வலியுறுத்தி, துண்டு பிரசுரம் வழங்கினர்.