/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பள்ளி வளாகத்தில் உள்ள மின்மாற்றியை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்பார்ப்பு பள்ளி வளாகத்தில் உள்ள மின்மாற்றியை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்பார்ப்பு
பள்ளி வளாகத்தில் உள்ள மின்மாற்றியை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்பார்ப்பு
பள்ளி வளாகத்தில் உள்ள மின்மாற்றியை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்பார்ப்பு
பள்ளி வளாகத்தில் உள்ள மின்மாற்றியை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்பார்ப்பு
ADDED : மே 24, 2025 02:23 AM

சித்தாமூர்:சிறுக்கரணை கிராமத்தில் அரசுப்பள்ளி வளாகத்தில் விபத்து ஏற்படும் நிலையில் உள்ள மின்மாற்றியை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்கின்றனர்.
சித்தாமூர் அருகே இரும்புலி ஊராட்சிக்கு உட்பட்ட சிறுக்கரணை கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளி இயங்குகிறது. இதில் 1 முதல் 5ம் வகுப்புவ வரை 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
குடியிருப்புகள் மற்றும் வயல்வெளியில் உள்ள மின்மோட்டார்களுக்கு மின்விநியோகம் செய்ய அமைக்கப்பட்டுள்ள உயர் அழுத்த மின்மாற்றி பள்ளி வளாகத்தில் உள்ளது.
உயர் அழுத்த மின்கம்பிகள் அறுந்து விபத்து ஏற்படும் நிலையில் உள்ளதால், பள்ளி வளாகத்தில் உள்ள மின்மாற்றியை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என குழந்தைகளின் பெற்றோர் நீண்ட நாட்களாக துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஆகையால் மின்வாரியத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விபத்து ஏற்படும் நிலையில் உள்ள மின்மாற்றியை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்கின்றனர்.