/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் நாய்களால் பயணியருக்கு இடையூறுகூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் நாய்களால் பயணியருக்கு இடையூறு
கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் நாய்களால் பயணியருக்கு இடையூறு
கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் நாய்களால் பயணியருக்கு இடையூறு
கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் நாய்களால் பயணியருக்கு இடையூறு
ADDED : பிப் 23, 2024 11:39 PM

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில், தினமும் 80க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் வந்து செல்கின்றன. இங்கு இருந்து, செங்கல்பட்டு, கல்பாக்கம், மாமல்லபுரம், திருப்போரூர், கேளம்பாக்கம், திருவான்மியூர், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இங்கு உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ -மாணவியர், பேருந்து நிலையத்தில் இறங்கி பள்ளிகளுக்கு சென்று வீடு திரும்புகின்றனர்.
சில தினங்களாக, இந்த பேருந்து நிலையத்தில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக, பயணியர் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, பயணியர் கூறியதாவது:
இந்த பேருந்து நிலைய வளாகத்தில், நாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொண்டு, பயணியரை விரட்டுகின்றன.
அதனால், பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பயணியர், அச்ச உணர்வுடனேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பயணியருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நாய்களை பிடிக்க, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதோடு, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து, கருத்தடை செய்து, இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.