/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/மாவட்ட ரேங்கிங் கேரம் போட்டி டில்லிபாபு, காசிமா முதலிடம்மாவட்ட ரேங்கிங் கேரம் போட்டி டில்லிபாபு, காசிமா முதலிடம்
மாவட்ட ரேங்கிங் கேரம் போட்டி டில்லிபாபு, காசிமா முதலிடம்
மாவட்ட ரேங்கிங் கேரம் போட்டி டில்லிபாபு, காசிமா முதலிடம்
மாவட்ட ரேங்கிங் கேரம் போட்டி டில்லிபாபு, காசிமா முதலிடம்
ADDED : ஜன 30, 2024 11:26 PM
சென்னை:மாவட்ட அளவிலான ரேங்கிங் கேரம் போட்டியில், எல்.ஐ.சி., வீரர் டில்லிபாபு, ஐ.ஓ.சி., வீராங்கனை காசிமா ஆகியோர் முதலிடங்களை வென்றனர்.
ஒய்.எம்.சி.ஏ., மெட்ராஸ் சார்பில், மாவட்ட அளவிலான ரேங்கிங் கேரம் போட்டிகள், சென்னை சென்ட்ரல் அருகிலுள்ள எஸ்பிளனேடு கிளையில் நடந்தன.
இதில், ஆடவர் மற்றும் பெண்கள், சப் - ஜூனியர், ஜூனியர் ஆகிய பிரிவுகளில், இருபாலருக்கும் தனிநபர் போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியில் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 230 வீரர் - வீராங்கனையர் ஆர்வமுடன் பங்கேற்று அசத்தினர். ஆடவருக்கான தனிநபர் இறுதிப் போட்டியில், எல்.ஐ.சி., வீரர் டில்லிபாபு மற்றும் முரளி கிருஷ்ணன் மோதினர். அதில், 25 - 00, 13 - 10 என்ற கணக்கில் டில்லிபாபு வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தார்.
பெண்களுக்கான ஆட்டத்தில், ஐ.ஓ.சி., எனும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வீராங்கனை காசிமா மற்றும் செரியன் நகர் கிளப் டெனினா விளையாடினர். அதில், 25 - 15, 25 - 10 என்ற கணக்கில் காசிமா வெற்றி பெற்று, முதலிடத்தை கைப்பற்றினார்.
தொடர்ந்து, சப் - ஜூனியரில் செரியன் நகர் கிளப்பை சேர்ந்த தர்ஷன், அதே கிளப் வீரர் அப்துல்லை, 21 - 6 , 8 - 13, 16 - 15 என்ற கணக்கில் தோற்கடித்து, கோப்பையை வென்றார்.
அதே பிரிவில் சிறுமியரில், செரியன் நகர் கிளப் வீராங்கனையர் டெனினா மற்றும் சுபஸ்ரீ மோதினர். அதில், 21 - 0, 14 - 18, 15 - 1 என்ற கணக்கில் டெனினா வெற்றி பெற்றார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒய்.எம்.சி.ஏ., சார்பில் பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.