/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ இ.சி.ஆர்., சாலை விரிவாக்கத்திற்கு கட்டடங்கள் இடிப்பு இ.சி.ஆர்., சாலை விரிவாக்கத்திற்கு கட்டடங்கள் இடிப்பு
இ.சி.ஆர்., சாலை விரிவாக்கத்திற்கு கட்டடங்கள் இடிப்பு
இ.சி.ஆர்., சாலை விரிவாக்கத்திற்கு கட்டடங்கள் இடிப்பு
இ.சி.ஆர்., சாலை விரிவாக்கத்திற்கு கட்டடங்கள் இடிப்பு
ADDED : ஜூன் 02, 2025 11:51 PM

செய்யூர்,மாமல்லபுரம் - புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலையை, நான்கு வழியாக விரிவாக்கம் செய்ய, கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.
சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக உள்ள நிலங்கள் மற்றும் கட்டடங்களை கையகப்படுத்த, ஏற்கனவே நெடுஞ்சாலைத் துறை சார்பாக ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, உரிமையாளர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டன.
தற்போது செய்யூர் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வரும் நிலையில் பனையூர், விளம்பூர், கோட்டைக்காடு, வேம்பனுார் உள்ளிட்ட பகுதிகளில் இழப்பீடு வழங்கியும், நீண்ட நாட்களாக கட்டடங்கள் அகற்றப்படாமல் இருந்தன. இதனால், சாலை விரிவாக்கப் பணி பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த கட்டடங்கள், சுற்றுச்சுவர் மற்றும் ஆக்கிரமிப்புகளை நேற்று, செய்யூர் வட்டாட்சியர் சரவணன் முன்னிலையில் நெடுஞ்சாலைத் துறையினர், 'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக இடித்து அகற்றினர்.