/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கருநிலத்தில் தெருக்கள் சேதம் குடியிருப்புவாசிகள் அவதி கருநிலத்தில் தெருக்கள் சேதம் குடியிருப்புவாசிகள் அவதி
கருநிலத்தில் தெருக்கள் சேதம் குடியிருப்புவாசிகள் அவதி
கருநிலத்தில் தெருக்கள் சேதம் குடியிருப்புவாசிகள் அவதி
கருநிலத்தில் தெருக்கள் சேதம் குடியிருப்புவாசிகள் அவதி
ADDED : மே 24, 2025 02:25 AM

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம் கருநிலம் கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கிராம மக்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் தெரு, எம்.ஜி.ஆர்., தெரு, புவனேஸ்வரி அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட தெருக்கள் குண்டும், குழியுமாக பெயர்ந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:
இந்த மூன்று தெருக்களிலும் நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை சிதிலமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
மழைக்காலங்களில் தெரு முழுதும் தண்ணீர் தேங்கி சகதியாக காணப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த தெருக்களில் புதிதாக தார் சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.