/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/சதுரங்கப்பட்டினம் அரசு பள்ளி மேலாண்மை குழுவிற்கு நற்சான்றுசதுரங்கப்பட்டினம் அரசு பள்ளி மேலாண்மை குழுவிற்கு நற்சான்று
சதுரங்கப்பட்டினம் அரசு பள்ளி மேலாண்மை குழுவிற்கு நற்சான்று
சதுரங்கப்பட்டினம் அரசு பள்ளி மேலாண்மை குழுவிற்கு நற்சான்று
சதுரங்கப்பட்டினம் அரசு பள்ளி மேலாண்மை குழுவிற்கு நற்சான்று
ADDED : பிப் 12, 2024 12:03 AM
சதுரங்கப்பட்டினம் : செங்கல்பட்டு மாவட்ட அரசுப் பள்ளிகளின் மேலாண்மைக் குழு தலைவர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் - 2024 மாநாடு, கடந்த பிப்., 9ம் தேதி செங்கல்பட்டில் நடந்தது.
ஒவ்வொரு பள்ளியின் மேலாணமைக் குழுவினரும், பள்ளி மேம்பாட்டிற்காக மேற்கொண்ட செயல்பாடுகள் குறித்து, இம்மாநாட்டில் அறிக்கை அளித்து விளக்கினர்.
மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித்துறை இணைந்து, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய பகுதியிலும், அக்குழுவின் தீவிர செயல்பாடுகள் அடிப்படையில், இரண்டு பள்ளிகளுக்கு நற்சான்று வழங்கியது.
கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி மேலாண்மைக் குழுவினர், அரிமா சங்கம் உள்ளிட்ட அமைப்பினரை அணுகி, பள்ளி வளாக கண்காணிப்பிற்கு, 70,000 ரூபாய் மதிப்பில் 10 சிசிடிவி கேமராக்கள் பொருத்தியது, வகுப்பறை கட்டட சீரமைப்பு, தண்ணீர் வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்டவற்றை செயல்படுத்தினர்.
திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில், இப்பள்ளி மேலாண்மைக் குழுவிற்கு, கலெக்டர் அருண்ராஜ் நற்சான்று வழங்கினார். குழு தலைவர் மோகனா, தலைமையாசிரியர் ராஜசேகரன் ஆகியோர் சான்றிதழை பெற்றுக்கொண்டனர்.
இதே ஒன்றியத்தில், கரியச்சேரி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேலாண்மைக் குழுவிற்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.