/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/மாமல்லை நடுநிலை பள்ளியில் வகுப்பறை கட்டட பணி துவக்கம்மாமல்லை நடுநிலை பள்ளியில் வகுப்பறை கட்டட பணி துவக்கம்
மாமல்லை நடுநிலை பள்ளியில் வகுப்பறை கட்டட பணி துவக்கம்
மாமல்லை நடுநிலை பள்ளியில் வகுப்பறை கட்டட பணி துவக்கம்
மாமல்லை நடுநிலை பள்ளியில் வகுப்பறை கட்டட பணி துவக்கம்
ADDED : ஜன 30, 2024 08:54 PM

மாமல்லபுரம்:மாமல்லபுரம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு, கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் நேற்று துவக்கப்பட்டன.
மாமல்லபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மழலையர் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
அவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வகுப்பறைக்காக இரண்டு கட்டடங்களே உள்ளன.
பாழடைந்த பழைய கட்டடமும் இடிக்கப்பட்டதால், மாணவர்களின் தேவைக்கேற்ப வகுப்பறை கட்டடம் இல்லாமல், குறுகிய இடத்தில் நெருக்கடியில் தவிக்கின்றனர்.
பெற்றோர், ஆசிரியர்கள், கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டித் தருமாறு, அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
கல்பாக்கத்தில் இயங்கும் சென்னை அணுமின் நிலைய நிர்வாகத்திடம், பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டத்தில், இப்பள்ளிக்கு கட்டடம் கட்ட, மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்தது.
நிலைய நிர்வாகம் பரிசீலித்து, 1.47 கோடி ரூபாய் மதிப்பில், தரை, முதல், இரண்டாம் ஆகிய தளங்களில், தலா இரண்டு வகுப்பறைகளுடன், கூடுதல் கட்டடம் கட்ட திட்டமிட்டுள்ளது. தற்போது, கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.