/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/சிறுசேரி சிப்காட் வளாகத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு ஒளிபரப்புசிறுசேரி சிப்காட் வளாகத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு ஒளிபரப்பு
சிறுசேரி சிப்காட் வளாகத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு ஒளிபரப்பு
சிறுசேரி சிப்காட் வளாகத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு ஒளிபரப்பு
சிறுசேரி சிப்காட் வளாகத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு ஒளிபரப்பு
ADDED : ஜன 07, 2024 11:20 PM

திருப்போரூர் : சென்னை வர்த்தக மையத்தில், தமிழ்நாடு உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு - -2024, நேற்று துவங்கி இரு நாட்கள் நடைபெறுகிறது.
முதல்வர் ஸ்டாலின், மாநாட்டை துவங்கி வைத்தார். இந்த மாநாட்டு நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய, பல இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்த வகையில், சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள வர்த்தக மைய கட்டடத்திலும், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்புக்கான ஏற்பாடு செய்யப்பட்டது
இதில், திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, செங்கல்பட்டு சப் - கலெக்டர் நாராயணசர்மா, முட்டுக்காடு ஊராட்சி தலைவர் சங்கீதா, புதுப்பாக்கம் ஊராட்சி தலைவர் ஆறுமுகம், புதுப்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் ஆதிலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.