ADDED : ஜன 29, 2024 04:53 AM

திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த படூர் ஊராட்சி நிர்வாகம், மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை மற்றும்
'விங்ஸ் ஸ்போர்ட்ஸ்' அகாடமி சார்பாக, ஜூனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் - -2024 போட்டி, நேற்று நடந்தது.
கேளம்பாக்கம் காவல் உதவி ஆணையர் வெங்கடேசன் போட்டியை துவக்கி வைத்தார்.
இதில், 13, 14, 15 வயதுடைய ஆண்- - - பெண் ஒற்றையர் போட்டியில், 'படூர் பஞ்சாயத் வாரியர்ஸ்' மற்றும் 'விங்ஸ் சூப்பர் கிங்' ஆகிய இரண்டு குழுக்களைச் சார்ந்த 54 பேர் பங்கேற்றனர்.
இறுதியில், போட்டியில் வெற்றி பெற்ற அணி மற்றும் சிறந்த வீரர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ்களை ஊராட்சி தலைவர் தாரா, மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை தலைவர் சுதாகர் ஆகியோர் வழங்கினர்.