/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூன் 28, 2025 02:42 AM

சூணாம்பேடு:வெண்ணாங்குப்பட்டில் காவல் துறை சார்பாக, பள்ளி மாணவர்கள் பங்கேற்று, போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
வெண்ணாங்குப்பட்டு மேல்நிலைப் பள்ளியில், சூணாம்பேடு போலீசார் மற்றும் யாதும் ஊரே தன்னார்வ அமைப்பு சார்பாக, போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த, விழிப்புணர்வு பேரணி நடந்தது.
போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து கோஷங்களை எழுப்பி, முக்கிய சாலைகளில் பள்ளி மாணவ - மாணவியர் விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
அதன் பின் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் மது பழக்கம், போதை பொருட்களுக்கு அடிமையாதல், எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகள், தீய பழக்கங்களில் இருந்து தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது ஆகியவை குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.