/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ஆதார் இணைப்பை நீக்கக்கோரி தர்ணா பொங்கல் தொகுப்பு கிடைக்காததால் ஆவேசம்ஆதார் இணைப்பை நீக்கக்கோரி தர்ணா பொங்கல் தொகுப்பு கிடைக்காததால் ஆவேசம்
ஆதார் இணைப்பை நீக்கக்கோரி தர்ணா பொங்கல் தொகுப்பு கிடைக்காததால் ஆவேசம்
ஆதார் இணைப்பை நீக்கக்கோரி தர்ணா பொங்கல் தொகுப்பு கிடைக்காததால் ஆவேசம்
ஆதார் இணைப்பை நீக்கக்கோரி தர்ணா பொங்கல் தொகுப்பு கிடைக்காததால் ஆவேசம்
ADDED : ஜன 11, 2024 12:45 AM

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த ஆலத்துாரில், தமிழக அரசின் 'டாம்கால்' சித்த மருந்து தயாரிப்பு நிறுவனம் உள்ளது.
இங்கு, ஒப்பந்த அடிப்படையில், 10 ஆண்டுக்கும் மேலாக, பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.
தற்போது, அரசு சார்பில், தகுதியுடைய குடும்பத்தலைவியருக்கு உரிமைத் தொகையாக மாதம் 1,000ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு ஆகியவை வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், மேற்கண்ட நிறுவனத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஆதார் எண், அரசின் டாம்கால் நிறுவனத்தில் இணைந்துள்ளது.
இதனால், உரிமைத்தொகை, பொங்கல் தொகுப்பு போன்ற அரசின் சலுகை கிடைக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டோர், நேற்று ஓ.எம்.ஆர்., - ஆலத்துார் சிட்கோ சாலை சந்திப்பிலும், நிறுவனத்தின் முன்பும் வேலையை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
டாம்கால் நிறுவனத்தில் இணைந்துள்ள ஆதார் இணைப்பை நீக்க வேண்டும்; ஆதார் எண்ணை நீக்கவில்லை என்றால் அரசு ஊழியராக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, திருப்போரூர் போலீசார், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்தற்கு வந்து, தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
எனினும், சுமுக முடிவு எட்டப்படவில்லை. தொடர்ந்து, இன்றும் பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.