ADDED : ஜன 02, 2024 10:47 PM
எண்ணுார்:எண்ணுார் பெரிய குப்பம் கோரமண்டல் உரத் தொழிற்சாலைக்கு வரும் குழாயில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு, கண் எரிச்சல், வாந்தி, மயக்கம், மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதனால் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட கோரி 10க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள், ஏழாவது நாளாக நேற்றும் மீன்பிடிக்க செல்லாமல் தொழிற்சாலை வாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.