/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/5 ஆண்டாக துரைப்பாக்கம் ரேடியல் சாலை விரிவாக்கம்...இழுத்தடிப்பு!:ஆக்கிரமிக்கும் வாகனங்களால் திணறடிக்கும் நெரிசல்5 ஆண்டாக துரைப்பாக்கம் ரேடியல் சாலை விரிவாக்கம்...இழுத்தடிப்பு!:ஆக்கிரமிக்கும் வாகனங்களால் திணறடிக்கும் நெரிசல்
5 ஆண்டாக துரைப்பாக்கம் ரேடியல் சாலை விரிவாக்கம்...இழுத்தடிப்பு!:ஆக்கிரமிக்கும் வாகனங்களால் திணறடிக்கும் நெரிசல்
5 ஆண்டாக துரைப்பாக்கம் ரேடியல் சாலை விரிவாக்கம்...இழுத்தடிப்பு!:ஆக்கிரமிக்கும் வாகனங்களால் திணறடிக்கும் நெரிசல்
5 ஆண்டாக துரைப்பாக்கம் ரேடியல் சாலை விரிவாக்கம்...இழுத்தடிப்பு!:ஆக்கிரமிக்கும் வாகனங்களால் திணறடிக்கும் நெரிசல்

மழைநீர் கால்வாய்
தற்போது, அந்த இடங்கள் முழுக்க தனியார் வாகனங்களின் நிறுத்தமாகவே மாறிவிட்டன. குறிப்பாக, ஜமீன் மற்றும் பழைய பல்லாவரம் பகுதிகளில், தொடர்ச்சியாக ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
விபத்து அபாயம்
அதேபோல, வாகன பராமரிப்பு, பழுதுபார்ப்பு மையங்களுக்கு வரும் வாகனங்களும், திருமண மண்டபங்களுக்கு வரும் வாகனங்களும் ரேடியல் சாலையில் நிறுத்தப்படுகின்றன.
3 மாதங்களில் முடிக்கப்படும்
பல்லாவரம் முதல் ஈச்சங்காடு சந்திப்பு வரை சாலை பணி முடிந்துவிட்டது. மழைநீர் கால்வாய் பணி, 90 சதவீதம் முடிந்துவிட்டது. ஆங்காங்கே கால்வாயை மட்டும் இணைக்க வேண்டியுள்ளது. இப்பணி, அடுத்த இரண்டு மாதங்களில் முடிந்து விடும். தொடர்ந்து, அணுகு சாலை பணி ஒரு மாதத்தில் முடிக்கப்படும். மின் கம்பம் அகற்றாதது ஒரு காரணமாக இருந்தது. சில இடங்களில் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களில், பல்லாவரம் முதல் ஈச்சங்காடு சந்திப்பு வரை, ஆறு வழிச்சாலை பணி முழுதாக முடிக்கப்படும்.
குழாய் பதிப்பில் தாமதம்
பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலை விரிவாக்க திட்டத்தில், மழைநீர் கால்வாய்க்காக பள்ளம் தோண்டும் போதெல்லாம், தாம்பரம் மாநகராட்சியின் பாதாள சாக்கடை குழாய் உடைக்கப்பட்டது. பல்லாவரம் பகுதியில் கழிவுநீர் பிரச்னை ஏற்படுவதற்கு இதுவே காரணம். பாதாள சாக்கடை குழாய் சேதப்படுத்தப்பட்ட இடங்களில், 20 கோடி ரூபாயில் புதிய குழாய் பதிப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. இதனாலே சாலை விரிவாக்க பணியும் இழுபறியாக இருந்துள்ளது. தற்போது, குழாய் பதிக்கும் பணியை மாநகராட்சியே மேற்கொண்டு உள்ளது. ஐந்து ஆண்டுகளாக நடக்கும் ஆறு வழிச்சாலை பணிக்கு, நெடுஞ்சாலைத் துறையினர் மெத்தனமே காரணம்.