ADDED : ஜூலை 07, 2024 12:50 AM

கூவத்துார்:கூவத்துார் அருகே முகையூர் கிராமத்தில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில், நேற்று காலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மயில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
இதுகுறித்து, அப்பகுதி வழியாக சென்றவர்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் வருவதற்கு முன் மயில் உயிரிழந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், உயிரிழந்த மயிலை ஆய்வு செய்ததில், 5 வயது ஆண் மயில் என தெரிய வந்தது.