/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/2வது திருமண ஆசை நகை இழந்த முதியவர்2வது திருமண ஆசை நகை இழந்த முதியவர்
2வது திருமண ஆசை நகை இழந்த முதியவர்
2வது திருமண ஆசை நகை இழந்த முதியவர்
2வது திருமண ஆசை நகை இழந்த முதியவர்
ADDED : பிப் 10, 2024 10:25 PM
திருவொற்றியூர்:திருவொற்றியூர், மேற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் ஆனந்தன், 60; ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர். இவரது மனைவி, 2020ல் இறந்து விட்டார். இதையடுத்து, 2வது திருமணம் செய்துக்கொள்ள விரும்பி, திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார்.
அதை பார்த்து, திருச்சி, உறையூரைச் சேர்ந்த சரண்யா என்பவர், ஆனந்தனை மொபைல் போனில் தொடர்பு கொண்டுள்ளார். 'பிடித்திருப்பதாகவும், திருமணம் செய்துக்கொள்ளலாம்' எனவும் பேசியுள்ளார்.
இதையடுத்து, சரண்யா தன் தோழியுடன் சென்னை வந்துள்ளார். அவர்களை ஆனந்தன் வீட்டிற்கு அழைத்து சென்றார். அப்போது, அவருக்கு காபியில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்துள்ளனர்.
இதில், ஆனந்தன் மயங்கிய நிலையில், படுக்கையறைக்கு சென்று துாங்கி விட்டார். சரண்யாவும், அவரது தோழியும், வீட்டின் லாக்கரில் இருந்த, 14.5 சவரன் தங்க நகைகள் மற்றும் மொபைல் போனை திருடி சென்றனர்.
மயக்கம் தெளிந்து, சரண்யாவிற்கு போன் செய்து பார்த்த போது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.