/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/வீடு பூட்டை உடைத்து 12 சவரன் கொள்ளைவீடு பூட்டை உடைத்து 12 சவரன் கொள்ளை
வீடு பூட்டை உடைத்து 12 சவரன் கொள்ளை
வீடு பூட்டை உடைத்து 12 சவரன் கொள்ளை
வீடு பூட்டை உடைத்து 12 சவரன் கொள்ளை
ADDED : மார் 11, 2025 11:36 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 31, இவரது மனைவி சரண்யா,29. ராஜ்குமார் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
சரண்யா நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு, உத்திரமேரூர் அடுத்த சீத்தனஞ்சேரி பகுதியில் உள்ள தன் தாய் வீட்டிற்கு சென்று உள்ளார்.
நேற்று அதிகாலை சரண்யாவின் வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்ட அக்கம்பக்கத்தினர், அவருக்கு தகவல் தெரிவித்தனர்.
சரண்யா வீட்டிற்கு வந்து பார்த்த போது, பீரோவின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த 12 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் 1.10 லட்சம் பணம் உள்ளிட்டவை திருடப்பட்டது தெரிந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சரண்யா அளித்த புகாரின்படி வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.